தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் துறைத்தலைவர்கள் நியமனம்; கல்லூரி ‘நிர்வாகங்களின்’ தொடர் விதிமுறை மீறல்கள் – இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

Posted by Dr K Pandiyan - September 21, 2013

அன்பார்ந்த நண்பர்களே!

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில்  ‘துறைத்தலைவர்’ நியமனம் பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே செய்யப்படவேண்டும் என்று பல்வேறு அரசு ஆணைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டும் கூட, தனியார் கல்லூரி நிர்வாகங்கள் தங்களின் ‘சொல்படி’ நடக்கும் நபர்கள் மட்டுமே ‘துறைத்தலைவர்’களாக இருந்திட வேண்டும் என விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன.

கல்லூரி முதல்வர், ‘பொறுப்பு’ முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள் நியமனம் குறித்து வெளிவந்துள்ள ஆணைகள் பற்றியத் தகவல்களை தங்களின் பார்வைக்கு தந்துள்ளோம் [பார்க்க]. துறைத்தலைவர்கள் நியமனத்தில், திருச்சி புனித வளனார் கல்லூரியில் உருவான பிரச்சைனையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய தீர்ப்பும் [பார்க்க1: தீர்ப்பு[பார்க்க 2 : தீர்ப்பு], அதன் மேல்முறையீட்டில் வழங்கப்பட்ட அமர்வு நீதிமன்றத்தீர்ப்பினையும் [பார்க்க : அமர்வு  தீர்ப்பு]  பாருங்கள்.  ‘சிறுபான்மை’ கல்லூரிகளிலும்,  துறைத்தலைவர், பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே செய்யப்படவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எந்த விதிமுறைகளையும் ‘துணிச்சலாக’ மீறுவோம்; அரசு ஆணை, இயக்குநரின் செயல்முறைகள் பற்றி கவலையில்லை’ என தனியார் கல்லூரி நிர்வாகங்கள் நடந்து வருகின்றன. இச்சூழலில், மேலும் ஒரு  ‘செயல்முறைகளை’இயக்குநர் வெளியிட்டுள்ளார் [DCE Order]. தனியார் கல்லூரி நிர்வாகங்கள் பின்பற்றுமா? என்ன?

அன்புடன்,

க.பாண்டியன்

This post has no comment. Post your Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *